9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!


rain in tamilnadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரபிக்கடல் கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.