தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu


வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement