
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டுவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தூக்க மின்றி தவிக்கின்றனர்.
கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதால் பெரு நகரங்களின் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் சென்னை கோயம்பேடு உள்பட சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்தநிலையில், தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement