#Breaking 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில்?



rain in tamilnadu

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் எனவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டி வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால், இன்று  தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.