தமிழகத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!


rain in tamilnadu

‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. புரெவி புயல் காரணமாக தமிழக்தின் தென் மாவட்டங்களில் கனத்தமழை பெய்தது.

இந்தநிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு , கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.