வெயிலால் தவித்துவந்த தமிழக மக்களை மகிழ்வித்த மழை! மேலும் 2 நாட்கள் தொடரும்!

வெயிலால் தவித்துவந்த தமிழக மக்களை மகிழ்வித்த மழை! மேலும் 2 நாட்கள் தொடரும்!


Rain in tamilnadu

தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று கோடை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்தது. மேலும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால், சாலையில் வெள்ளநீா் பெருக்கெடுத்து  ஓடியது.

காற்று மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட தமிழகம் முழுவதும் பரவ லாக நேற்று இடியுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் மயிலம்பட்டியில் 71 மி.மீ. மழை பதிவானது.

rain

அதேபோல் சென்னை, புறநகர் பகுதிகளி லும் மழை பெய்தது. தமிழகம் சமீப காலமாக வெயில் வெளுத்துகட்டி வருகிறது. இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் நேற்று பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், நேற்று பயங்கர இடி மின்னல் ஏற்பட்டது.இதனால் அதிகப்படியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.