தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!


rain in tamilnadu

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்குறிப்பிட்டார். இதனால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்து வருவதாக அவர் கூறினார். 

rain

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் பாலசந்திரன் குறிப்பிட்டார். இந்தநிலையில்,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். சென்னை நகரை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் கூறினர்.