
Summary:
rain in tamilnadu
கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் பருவமழை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாகவும் இதன் காரணமாக கூடுதல் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழ்பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் பகுதிகளில் மழை பரவலாக பெய்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. மேலும் அடுத்த 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தற்போதைய நிலவரப்படி ஜனவரி 5 வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement