தமிழகத்தில் 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.! கோடை வெயிலில் குஷியில் மக்கள்.!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.! கோடை வெயிலில் குஷியில் மக்கள்.!


rain in tamilnadu

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் அனேக இடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை ), நாளை யும் (புதன்கிழமை ) இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல்  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 19, 20-ந்தேதிகளிலும் தமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெ ய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தரி வெயில் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.