தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் பெய்யவிருக்கும் மழை.!! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா.?

Summary:

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூட

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், இயல்பான மழை அளவை விட அதிக மழை கிடைத்து இருந்தது. 

இந்தநிலையில், நீண்ட நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னையில், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கோவை மற்றும் நீலகிரியில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement