தமிழகம்

தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா??

Summary:

தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா??

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்க கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் பெய்யும் எனவும்.

விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற பகுதிகளின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.


Advertisement