புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!


rain in tamilnadu


வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் குறிப்பிட்டார். 

rain

மேலும் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதாகவும், அந்த புயல் வரும் 6 ஆம் தேதி இரவு அல்லது 7ஆம் தேதி அதிகாலை குஜராத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் புவியரசன் தெரிவித்தார்.