தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

Summary:

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து கடந்த 9-ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில்உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கன மழை பெய்தது.

இதனைத் தொடர்ந்து அந்தமானில் இன்று (சனிக்கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களின் அனேக இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement