சுட்டெரிக்கும் வெயிலினால் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!

சுட்டெரிக்கும் வெயிலினால் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!


rain-in-tamilnadu-3HP4VG

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலில் மக்கள் வதைபட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.  இந்தநிலையில், இன்றும் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.