தமிழகம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுத்துவாங்கவிருக்கும் மழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

Summary:

கேரளா முதல் உள் கர்நாடகம் வரை நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை ம

கேரளா முதல் உள் கர்நாடகம் வரை நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், தேனீ, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நாளை தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கோடை வெயிலில் மக்கள் வதைபட்டு வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல் மக்களை குளிர வைத்துள்ளது.


Advertisement