திடீரென கொட்டித்தீர்த்த கனமழை.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!



rain in tamilnadu

தமிழகம்  முழுவதும் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய  பலத்த மழை பொழியும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. 

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சனிக்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இது ம்பா சாகுபடி  அறுவடை காலம் என்பதால் டெல்டா மாவட்டங்களில் திடீர் மழை காரணமாக அறுவடை பணிகள்  பாதித்தது.