வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்தோம்.! அறுவடை நேரத்தில் இப்படி அழுச்சுட்டியே.! கதறும் புதுக்கோட்டை விவசாயிகள்.!

வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்தோம்.! அறுவடை நேரத்தில் இப்படி அழுச்சுட்டியே.! கதறும் புதுக்கோட்டை விவசாயிகள்.!


rain-in-pudukkottai

தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த மழையால் நெல்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டையில், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்றாக விளைந்து நெல்மணிகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்தன. இவற்றில் பெரும்பாலான பயிர்கள் மழை நீரில் மூழ்கி, வயல்களில் சாய்ந்தன. இதனால், பல ஆயிரக்கணக்கில் செலவழித்து, கடினமாக உழைத்து பயிர் செய்த விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துள்ளனர்.

rain

நன்கு வளர்ந்த நெற்கதிர்கள் மழையால் தரையில் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் இயந்திரங்களை கொண்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வழக்கமாக பெய்யக்கூடிய ஐப்பசி மாதத்தில் கூட இப்படி மழை பெய்யவில்லை. விவசாயிகளின் அறுவடை நாட்களான மார்கழி கடைசியில இதுவரை பார்த்திடாத அளவிலான மழை பொழிகிறது. வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து, இப்படி அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளதாக கூறுகின்றனர் புதுக்கோட்டை விவசாயிகள்.