"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.! லயோலா கல்லூரியில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்.!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போதும் மழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில் நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து மூன்று நாளைக்கு இந்த மழை தொடரும் என வானிலை மையம் கூறியதகவலால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
நள்ளிரவில் இருந்து பெய்த மழையால் சென்னை லயோலா கல்லூரியின் வளாகத்தில் இருந்த நூறு ஆண்டு பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் கல்லூரி தடுப்புச்சுவர் உடைந்து விழுந்து சாலையில் மரம் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து சற்று நேரத்தில் மரத்தை அப்புறப்படுத்தினர்.