தமிழகம்

ஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.! அவதிப்படும் வாகன ஓட்டிகள்.!

Summary:

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலகம் முன்பு உள்ள சாலையில், நேற்று இரவு முதல் தற்போதுவரை மழை பெய்துவருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  வடபழனி, கோயம்பேடு, சைதாப்பேட்டை ,அண்ணா நகர்,எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தற்போதுவரை மழை பெய்து வருகிறது. 

சென்னையில் இரவில் இருந்து பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலகம் முன்பு உள்ள சாலையில், நேற்று இரவு முதல் தற்போதுவரை மழை பெய்துவருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 


Advertisement