"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை..! தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள்.! அமைச்சர் கொடுத்த தகவல்
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3 பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதையும் தவிர்க்கவேண்டும். வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளலாம்.
நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் பாதிக்கப்பட நேர்ந்தால் உடனே 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியா வசிய அரசு ஊழியர்கள் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.