சென்னையில் கொட்டி தீர்த்த மழை! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையில் கொட்டி தீர்த்த மழை! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா?


rain in chennai


தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்கவே தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் இரண்டு நாட்களாகவே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Rain in chennai

வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு  நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே அலுவலகம் செல்பவர்கள் ரெயின் கோட், குடை போன்றவற்றை எடுத்துச்சென்றால் தற்காப்பாக இருக்கும். இதேபோல் தொடர்ந்து ஒரு வாரங்களுக்கு மழை பெய்தால் சென்னையில் தண்ணீர் பிரச்சனை நீங்கிவிடும் என சென்னை மக்கள் கூறுகின்றனர்.