11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்...!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்...!



rain-alert-for-11-districts-in-tamilnadu

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சில மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும், சென்னையில் அடுத்த 28 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் வானம் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நாளைவரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tamilnadu

அத்துடன் நாளை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.