கதிகளங்கவைக்கும் ஒமிக்ரான் வைரஸ்.! பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்.. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.!Radhakrishnan talk about Omicron virus

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனாவால் உலகின் பல நாடுகளில் பலர் பலியாகினர். தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவிற்குள் பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்கள், விமான நிலைய இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கொரோனாவை பலரும் அலட்சியமாக பார்க்க தொடங்கி உள்ளனர். கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும். உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் அதிதீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் பரவவில்லை எனினும் முன்னெச்சசரிக்கையுடன் இருப்பது நல்லது. பரவ தொடங்கினால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது. தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.