ஊரடங்கால் பூட்டிக்கிடந்த நகைக்கடைக்குள் 19 முட்டைபோட்டு அடைகாத்த மலைப்பாம்பு.! வைரல் வீடியோ.!
கேரளாவில் நகை கடை ஒன்றில் மலைப்பாம்பு குடியேறி 19 முட்டைகள் போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வரும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்துவிதமான கடைகளும் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணுரில் உள்ள பையனுர் என்னும் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றை சுத்தம் செய்வதற்காக திறந்தபோது உள்ளே சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அடுக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் மலைப்பாம்பு குடும்பம் நடத்தி 19 முட்டைகளை போட்டு அடைகாத்துள்ளது. பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் 24 கிலோ எடைகொண்ட மலைப்பாம்ப்பை பிடித்ததோடு அது அடைகாத்துவந்த 19 முட்டைகளையும் கைப்பற்றினர்.
கடையை திறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகியிருந்தாலும் முட்டைகளில் இருந் பாம்பு குட்டிகள் வெளியேறி அந்த கடையே பாம்புகளின் கூடாரமாக மாறியிருக்கும் என வனத்துறை ஊழியர்கள் கூறியுள்ளனர்.