தமிழகம் சினிமா

காரில் சென்ற மகள் இன்னும் வரவில்லை! குப்புசாமியின் மகளுக்கு என்னதான் ஆச்சு! போலீசில் புகார்!

Summary:

Pushpavanam kuppusamy daughter pallavi missing

தமிழ் சினிமாவில் பிரபலமான நாட்டுப்புற பாடகர்களில் ஒருவர் புஸ்பவனம் குப்புசாமி தம்பதியினர் ஒருவர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வரும் இவர்களுக்குள் இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் பல்லவி. மருத்துவம் படித்துவருகிறார்.

இந்நிலையில் தங்கள் முதல் மகள் பல்லவியை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னனர். அவர்கள் கொடுத்துள்ள புகாரில், கடந்த ஞாயிற்று கிழமை தங்கள் மகள்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்ததாகவும், இதில் கோவித்துக்கொண்டு தங்கள் முதல் மகள் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கோபித்துக்கொண்டு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை, தங்கள் மகளை கண்டுபிடித்து தருமாறு பல்லவியின் பெற்றோரான புஸ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


Advertisement