புஷ்பா படத்தின் காட்டுப்பகுதி சண்டையை ரீமேக் செய்து வெளியிட்ட இளைஞர்.. வீடியோ வைரல்.!Pushpa Movie Fight Scene Remake Video Goes Viral

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற செம்மர கடத்தல் பின்னணி தொடர்பான கதையம்சத்தை கொண்ட புஷ்பா திரைப்படம், வசூல் ரீதியாகவும் - வரவேற்பு ரீதியகவும் அமோக வரவேற்பு பெற்றது. 

ரஷ்மிகா மாடானா, பகத் பாசில் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல், சண்டை காட்சிகள் பெருமளவில் வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில், இளைஞர் ஒருவர் புஷ்பா படத்தில் உள்ள நாயகனின் சண்டை காட்சி ஒன்றை மறுகாட்சிப்பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். திரைப்படத்தில் நடந்த சண்டை காட்சிகள் போலவே, இந்த விடீயோவின் காணொளியும் அமைந்துள்ளது.