அரசியல் தமிழகம்

டிடிவி தினகரனுக்கு 20 ரூபாய் டோக்கன் ஐடியா கொடுத்தவர் திமுகவின் முக்கிய புள்ளி! தினகரன் உடன் இருந்தவரே போட்டுடைத்த பகீர் பேட்டி!

Summary:

Puhalenthi talk about ttv Dhinakaran

ஆர்.கே நகர் தேர்தலில், ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கனை வாக்காளர்களுக்கு வழங்கிய யோசனையை, டிடிவி தினகரனுக்கு கூறியது, திமுகவின் செந்தில் பாலாஜிதான் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அமமுக கட்சியில் தினகரனின் நம்பிக்கையாக இருந்தவர் புகழேந்தி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். 

இந்தநிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில், கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினர். 

கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய புகழேந்தி, தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.கே நகர் மக்களுக்கு டிடிவி தினகரன் இதுவரை என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டிடிவி தினகரனுக்கு கூறியது, தற்போது திமுகவின் செந்தில் பாலாஜிதான் என தெரிவித்தார். ஆனால் ஆர்.கே நகர் தேர்தலின்போது புகழேந்தி டிடிவி தினகரனுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement