புதுக்கோட்டை மருத்துவமனையில் 7வயது சிறுமியின் உடலை வாங்கும்போது பரபரப்பு! அன்பாக பேசி புரியவைத்த மாவட்ட ஆட்சியர்!

புதுக்கோட்டை மருத்துவமனையில் 7வயது சிறுமியின் உடலை வாங்கும்போது பரபரப்பு! அன்பாக பேசி புரியவைத்த மாவட்ட ஆட்சியர்!



pudukottai collector helping to died child family

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் திடடேரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  . சிறுமியின் தலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு, இந்த கொலை சம்பந்தமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

pudukottai

 இதனையடுத்து ,சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியைத் தானே வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்கும் நேரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. பி. உமா மகேஸ்வரி நேரில் வந்து பொதுமக்களிடம் பேசினார். மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இலவச வீட்டு மனை பட்டாவிற்கு வட்டாச்சியர் மூலமாக செயல்படுத்த சொல்லியிருக்கோம், அதேபோல் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் மூலமாக வீடு ஒதுக்கி தருவதற்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம் என கூறினார்.

pudukottai

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், போக்ஸோ சட்டத்தின் கீழ் நிவாரணத்தொகை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கண்டிப்பாக நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுப்போம், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உறுதுணையாக இருப்போம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அணைத்து உதவிகளையும் செய்வோம் என வாக்குறுதி அளித்தார் மாவட்ட ஆட்சியர் திருமதி. பி. உமா மகேஸ்வரி. இதனையடுத்து பொதுமக்களும் சமாதானம் அடைந்தனர்.