புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்பது முற்றிலும் வதந்தி! மாவட்ட ஆட்சியர் கொடுத்த தகவல்!pudukkottai-helicoptor-accident-is-fake

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  பகுதியில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது என்று பகிரப்பட்டு வந்த செய்தி முற்றிலும் வதந்தி என உறுதி படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்கானூர் ஊராட்சி வைந்தனூர் கண்மாயில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல் பரவியது.

helicoptor

இதனையடுத்து அங்கு நடந்த விபத்து செய்தி உண்மையா என கண்டறிய புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட உத்தரவிவிட்டார். அங்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள் அங்கு ஏற்பட்டது வெறும் தீ விபத்து மட்டுமே என்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.