தமிழகம்

பெண்கள் அணிந்து வந்த பர்தாவுக்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியான போலீசார்! புதுக்கோட்டையில் திக் திக்!

Summary:

Pudukkottai fake muslim ladies hide money in burka

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை சுத்தி முஸ்லீம் பெண்கள் போன்று பர்தா அணிந்துகொண்டு சுற்றித்திரிந்த இரண்டு பெண்களை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை பேருந்துநிலையத்தை சுற்றி சில நாட்களாக சந்தேகப்படும்படி ஒருசிலர் சுற்றுவதாகவும், முஸ்லீம் பெண்கள் போன்று பர்தா அணிந்து நடமாடும் அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ஜோடியாகவும், அதன்பின்னர் தனி தனித்தனியாகவும் சுற்றுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட மர்ம ஆசாமிகளை சில தினங்கள் மறைந்திருந்து இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி காவல்துறையினர் இந்த மர்ம கும்பலை பிடிப்பதற்கு ஒரு குழு அமைத்துள்ளனர்.

அந்த மர்ம நபர்களையும் பிடிக்கும் முயற்சியில் ஒருசிலர் தப்பிவிட்ட நிலையில் இருவர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். மாட்டிக்கொண்ட நபர்களை சோதனை செய்ததில் அவர்களின் பர்தாவிற்குள் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் என்ற கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கி இவ்விருவரின் கூட்டாளிகளையும் மும்முரமாக தேடி வருகின்றனர்.


Advertisement