முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 5 மாநகராட்சி பகுதிகள்! பொதுமக்கள் வெளியே வந்தால் என்ன தண்டனை.?

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 5 மாநகராட்சி பகுதிகள்! பொதுமக்கள் வெளியே வந்தால் என்ன தண்டனை.?


Public not allowed outside for 144

 சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

144

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல், கொரோனா பரவலில் அடுத்தபடியாக உள்ள சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் இன்றுமுதல் வரும் 28-ந் தேதி வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் 5 மாநகராட்சி பகுதிகளிலும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஊடகத் துறை தொடர்பான பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து, வீட்டை விட்டு வேறு பணிகளுக்காக யாரும் வெளியே வந்தால், அவர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு நடைமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.