தமிழகம்

ஓய்வுபெற்ற தமிழக தபால்காரர்! ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு!

Summary:

public appreciate retired postman

தபால்துறையில் பணிபுரியும் தபால்காரர் டி சிவன் என்பவர், தமிழ்நாட்டின் குன்னூர் மலைப்பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 15 கி.மீ தூரம் நடந்து சென்று, தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கடிதங்களை வழங்கி வந்துள்ளார். தனது முழு வாழ்க்கையையும் தான் செய்த தபால்துறை பணிக்காக அர்ப்பணித்த சிவன், 30 வருட சேவைக்குப் பிறகு தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ என்பவர், அவரது  டிவிட்டர் பக்கத்தில் “குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில் அஞ்சல் அனுப்ப தபால்காரர் டி.சிவன் கடினமான காடுகள் வழியாக தினமும் 15 கி.மீ. பயணித்துள்ளார். காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து கடந்த 30 வருடமாக தனது பணியை அர்பணிப்புடன் செய்த தபால்காரர் சிவன் கடந்த வாரம் ஓய்வுப் பெற்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

தபால்கார் டி.சிவன் ஒரு "உண்மையான சூப்பர் ஹீரோ" என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.  "கீழ்மட்ட மக்களின் வீட்டு வாசல்கள் வரை அவர் அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகளின் பயன்களைக் கொண்டு சென்றுள்ளார் என்றும் பாராட்டி வருகின்றனர். தபால்காரர் சிவனின் சேவையை நடிகர் சிரஞ்சீவியும்  பாராட்டியுள்ளார்.


Advertisement