ஆகா சூப்பர்.. ஒரே உத்தரவால் ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

ஆகா சூப்பர்.. ஒரே உத்தரவால் ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!


public-appreciate-mk-stalin

தமிழக முதலமைச்சராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரண தொகை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு பொதுமக்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச புத்தகப் பைகளில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படங்களை நீக்கவேண்டும் அல்லது அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

MK Stalin

இந்த புத்தக பைகளை வாங்க 13 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். இந்த புகைப்படங்களை நீக்க ஆகும் ரூ.13 கோடியை அரசுப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடுவேன் எனக்கூறி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் அச்சிட்ட புத்தகப்பையையே விநியோகிக்க முதல்வர் உத்தரவிட்டார். இது பலரின் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில், முதல்வரின் நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற தெலங்கு திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.