தமிழகம்

நடுராத்திரியில் திடீரென அலறி அடித்து ஓடிய பெண்கள்..! விசாரணையில் அதிர்ந்து போன போலீசார்..!

Summary:

Psycho man killed 65 years old lady near thirupur

தூங்கி கொண்டிருந்த பெண்கள் தலையில் கல்லை போட்டு சைக்கோ ஒருவன் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (65) இவர் தன்னுடைய மகன், மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜோதிலட்சுமி வீட்டின் வெளியே இருந்த தள்ளுவண்டியில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் ஜோதிலட்சுமி தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஹாலோபிளாக் கல் ஒன்றை எடுத்து ஜோதிலட்சுமியின் தலையில் போட்டுள்ளார். 

இதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதனை அடுத்து, ஜோதிலட்சுமியின் மருமகள் கலைவாணி (30) மற்றும் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயலட்சுமி (30) ஆகியோர் மீதும் மர்மநபர் கல்லை தூக்கிபோட்டுள்ளார்.

இதில் அவர்கள் இருவர் தலையும் உடைந்து இரத்தம் கொட்டியுள்ளது. பின்னர், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் காயத்துடன் இருந்த இருவரையும் மருத்துவமையில் அனுமதித்தனர். இதில் சைக்கோ வாலிபருடன் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


Advertisement