ஆலங்குடியில் இந்து முன்னணி நகரத்தலைவருக்கு அரிவாள் வெட்டு! நலம் விசாரிக்கச் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் கைது!

ஆலங்குடியில் இந்து முன்னணி நகரத்தலைவருக்கு அரிவாள் வெட்டு! நலம் விசாரிக்கச் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் கைது!


problem-in-alangudi


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், பிளக்ஸ் பேனர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் மங்கோட்டை கீழப்பட்டியை சேர்ந்த முருகானந்தம். இவர் ஆலங்குடி இந்து முன்னணி நகர தலைவராக உள்ளார். 


ஒரு வாரத்துக்கு முன், முஸ்தபா, ஜபருல்லா என்பவருக்கும் ஆலங்குடியில், பிளக்ஸ் வைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் ரகுமான், அவரது சகோதரர் முஸ்தபா, முகமதுகனி, முகமது நியாஸ், அப்பாஸ், கணேசன், மணிகண்டன் ஆகியோர், பிளக்ஸ் பேனர் நிறுவனத்துக்கு சென்று, அங்கிருந்த முருகானந்தத்தை அரிவாளால் சரம்வாரியாக வெட்டியுள்ளனர். தந்து மகனை வெட்டுகிறார்களே என அலறல் சத்தம் போட்டு அவர்களை தடுக்க முயன்ற, அவரது தந்தை கணேசனையும், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். 

படுகாயம் அடைந்த முருகானந்தம் மற்றும் அவரது தந்தை கணேசன் இருவரும் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஆலங்குடியில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினர் மீதும், ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துஇருவரை கைது செய்துள்ளனர். 

fight

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணி அளவில் தனியார் பேருந்தில் புதுக்கோட்டை சென்ற முஸ்தபாவை, அதே பேருந்தில் சென்ற சிலர், திருவரங்குளம் வனப்பகுதியில் இறக்கி, பலமாக தாக்கி, தப்பிச் சென்று விட்டனர். காயமடைந்த முஸ்தபா, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் ஆலங்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணி நகர தலைவர் முருகானந்தம், அவரது தந்தையை நலம் விசாரிக்க வந்த இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள், திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் சென்றபோது அவர்களை போலீசார், துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் தடுத்து, கைது செய்தனர். இதனால் இந்துமுன்னணி நிர்வாகிகள் காவல்நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.