திடீரென அதிகரித்த பேருந்து கட்டணம்! அதிர்ச்சியடைந்த பயணிகள்!

திடீரென அதிகரித்த பேருந்து கட்டணம்! அதிர்ச்சியடைந்த பயணிகள்!


Private bus rate increased

ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு கிலோமீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா கோரத்தாண்டவம் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் இந்தியாவிலும் பரவி பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்தவகையில் 4 வது ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது, அதில் பேருந்து போக்குவரத்து சிலகட்டுப்ப்பாடுகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.  

Omni bus

இந்நிலையில், ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு கிலோமீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரித்து இருந்த நிலையில் இந்த தகவல் பேருந்து பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.