அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
புழல் சிறை அருகே பரபரப்பு.! ஒரு நிமிஷம் சார்... காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்த கைதி... தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
சென்னை புழல் சிறை அருகே கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கைதியை தப்ப விட்ட இரண்டு காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(26). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழிப்பறி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருவேற்காடு பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர்.
புழல் சிறை அருகே தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று காவலர்களிடம் கூறிய சீனிவாசன் அவர்கள் கைவிலங்கை அகற்றியதும் காவலர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடியவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவரை தப்பவிட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.