கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தீபாவளி பரிசு.! ஆலங்குடி இளைஞர்கள் அசத்தல்.!

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தீபாவளி பரிசு.! ஆலங்குடி இளைஞர்கள் அசத்தல்.!


price fro vaccinated people

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லமுடியும் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அம்பேத்கர் நகர் இளைஞர்கள் அப்பகுதி மக்களை தடுப்பூசி போடவைப்பதற்காக அதிரடி ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளனர்.

Vaccine

அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், ஆலங்குடி பேரூராட்சி 5வது வார்டு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு, கொரோனா  தடுப்பூசி போடுபவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இரண்டாவது தடுப்பு செலுத்திய முதல் 5 குடும்பங்களுக்கு, முதல் பரிசு பட்டு வேட்டி, பட்டு சேலை வழங்கப்படும். அதேபோல் முதலாவது தடுப்பூசி செலுத்திய முதல் 5 குடும்பங்களுக்கு, முதல் பரிசு சில்வர் பெரிய வாளி வழங்கப்படும்.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 10 குடும்பங்களுக்கு, இரண்டாவது பரிசாக சில்வர் பெரிய வாளி, முதலாவது தடுப்பூசி செலுத்திய 10 குடும்பங்களுக்கு இரண்டாவது பரிசாக சில்வர் பெரிய தாம்பூலம் வழங்கப்படும். மேலும் தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என ஆலங்குடி அம்பேத்கர் நகர் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.