தமிழகம்

கொரோனா பாதித்த நிறைமாத கர்ப்பிணி..! வயிற்றில் வளர்ந்த இரட்டை குழந்தைகள்..! பிரசவத்தின் போது உயிரிழந்த சோகம்..!

Summary:

Pregnant women died for corono while delivery in Madurai

வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில் பேறுகாலத்தின் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 45 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்ந்துள்ளது. இந்நிலையில்  பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டநிலையில் மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

ஆனால் அந்த பெண் பேறுகாலத்தின் போதே பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளை ஆரோக்கியத்துடன் மீட்டனர். குழந்தை பிறந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement