இன்ஸ்டாகிராம் காதலனால் கர்ப்பம்: கழிவறையில் குழந்தை பெற்ற சிறுமி!,, அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!



Pregnancy by Instagram boyfriend: Girl gives birth in toilet

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி (17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அந்த இளைஞர் காய்கறி கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் தனியாக அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்ததுடன் நெருக்கமாகியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதில் மயங்கிய சிறுமி அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கா்ப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில், சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டின் கழிவறைக்கு சென்ற அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் அவர் மயங்கிய நிலையில் கழிவறையிலேயே கிடந்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியை நீண்ட நேரம் காணததால், குடும்பத்தினர் அவரை தேடினர். அப்போது கழிவறையில் பிரசவித்து மயங்கிய நிலையில் குழந்தையுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில், வெற்றிமணி என்பவருடன் நெருங்கி பழகியதாகவும், அதனால் கர்ப்பமடைந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதார நிலைய செவிலியரின் அறிவுறைப்படி, சிறுமியையும் குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் வெற்றிமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.