தமிழகம்

தலைக்கேறிய போதை.! தாயை தரக்குறைவாக பேசியதால் தான் அப்படி செய்தேன்.. மகனின் பரபரப்பு வாக்குமூலம்.!

Summary:

Pothaiyil thayai tharakuraivaka pasiya nabaral nikalntha sokam

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கன்னிக்கோவில் பகுதியில் குளத்தில் கடந்த 16 ஆம் தேதி தலையில் பலத்தக்காயங்களுடன் 30 வயது மதிக்கத்தக்க வெங்கடேசன் என்ற கட்டிட தொழிலாளி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். அதனை அடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

அதில் தலையில் யாரோ பலமாக தாக்கியதில் தான் வெங்கடேசன் இறந்துள்ளார் என தெரிந்துள்ளது. அதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் கஜேந்திரன் என்ற இளைஞனை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது கஜேந்திரன் வீட்டின் பக்கத்தில் வெங்கடேசன் செங்கல் இறக்க சென்ற போது அதிலிருந்து தூசி பறந்துள்ளது. இது குறித்து கஜேந்திரன் தாய் கன்னியம்மாள் வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். அப்போது வெங்கடேசன் தனது தாயை தரக்குறைவாக பேசி தகராறு செய்துள்ளார். 

அதனை அடுத்து கடந்த 14 ஆம் தேதி இரவு டெங்கடேசன் தனிமையில் நடந்து வந்து கொண்டிருந்த போது நானும் என் நண்பரும் வெங்கடேசனிடம் தட்டி கேட்டோம். அப்போது வெங்கடேசன் தனது நண்பனை அடித்ததால் போதையில் இருந்த கஜேந்திரன் தனது நண்பருடன் சேர்ந்து வெங்கடேசனின் தலையில் கத்தியால் குத்தி கொலை செய்து குளத்தில் வீசியதை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். 

அதனை அடுத்து போலீசார் கஜேந்திரன் மற்றும் அவரது நண்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 


Advertisement