வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அம்மா, மகள், மருமகள் என ஒரேகுடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் ஆபாச சேட்டிங்.. சீட்டிங் பாதிரியாரின் பகீர் செயல்கள்.!
100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த பாதிரியார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கொல்லங்கோடு பகுதியைச் சார்ந்த பாதிரியார் பெனடிக் ஆண்ட்ரோ, அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு பிரார்த்தனைக்கு வரும் பல பெண்களை தனது ஆபாச வலையில் வீழ்த்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது சமீபத்தில் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக பல ஆபாச வீடியோ, போட்டோ வெளியாகின.
இந்நிலையில், இவரின் மீது வாட்ஸப்பில் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி, இளம்பெண் உட்பட 3 பேர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் பெனடிக் ஆண்ட்ரோவை கைது செய்தனர்.
கைதான பாதிரியாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தனித்தனியே பெண்களை ஏமாற்றியது உறுதியானது. மேலும், காதல் தோல்வியின் காரணமாக இவ்வாறான செயல்களை செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல, விசாரணையில் திடுக் திருப்பமாக மகள், அம்மா, மருமகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களிடம் காம லீலையில் பாதிரியார் ஈடுபட்ட பகீர் சம்பவமும் அம்பலமாகியுள்ளது.