தமிழகம்

5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை! எடுத்து கூறிய மனைவி! விபரீத முடிவெடுத்த கணவன்!

Summary:

Pondichery man commit suicide because of no baby

திருமணம் முடிந்து 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் பாண்டிச்சேரியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்து நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சாந்தினி. எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்துவந்த விஸ்வநாதனுக்கு, சாந்தினிக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

இதனால் பல்வேறு சிகிச்சைகள், கோவில், சாமி வழிபாடு என பலமுயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. இதனால் விஸ்வநாதன் மனஉளைச்சலில் இருந்துள்ளார். கவலை படாதீங்க, நமக்கு எப்படியும் குழந்தை பிறக்கும் என சாந்தினி பலமுறை கணவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

ஆனால், விரக்தியின் உச்சத்தில் இருந்த விஸ்வநாதன் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement