வெளிநாட்டில் வேலை என பெண்ணை பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த கொடூரம் : எலக்ட்ரிக் ஷாக் வைத்து கொடுமை.!

வெளிநாட்டில் வேலை என பெண்ணை பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த கொடூரம் : எலக்ட்ரிக் ஷாக் வைத்து கொடுமை.!


pondicherry-girl-trap-job-forgery-cambodia-accuse-murug

கம்போடியா நாட்டிற்கு கால்சென்டர் வேலை என அழைத்து சென்று பெண்ணை கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலாளியாக விற்பனை செய்திடுவோம் என மிரட்டிய பயங்கரம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில், கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி கம்போடியா நாட்டிற்கு டெலிகாலர் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்ற (வயது 48) என்பவர் கொடுத்துள்ளார்

இதனைக்கண்ட 25 வயது இளம்பெண் முருகனுக்கு தொடர்பு கொண்டு வேலை கேட்கவே, சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு விசா மற்றும் கமிஷன் தொகையாக ரூ.3.25 இலட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. 

பெண்ணும் முருகனை நம்பி பணம் கொடுத்த நிலையில், கம்போடியா நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அவரை அனுப்பி வைத்த நிலையில், அங்கு டெலிகாலர் வேலைக்கு பதில் சட்டவிரோத செயலில் ஈடுபட நிறுவனத்தார் கூறியுள்ளனர்.

Pondicherry

இதற்கு பெண்மணி மறுத்ததால் நிறுவனத்தின் மேலாளர் 2 பேர் சேர்ந்து உன்னை விலைகொடுத்து வாங்கியுள்ளோம், சட்டவிரோத செயலை செய்யத பட்சத்தில் பாலியல் தொழில் செய்வோரிடம் உன்னை விற்பனை செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், தனி இடத்தில் பெண்ணை அடைத்து வைத்து அடித்து கொடுமை செய்து எலக்ட்ரிக் ஷாக் வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றொரு இந்தியரின் உதவியோடு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். பின்னர், இதுகுறித்து புதுச்சேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முதலியார்பேட்டையை சேர்ந்த முருகனை கைது செய்தனர். முருகனிடம் இதனைப்போல வேறு யாரேனும் ஏமாற்றமடைந்தாரா? எதற்காக பெண்ணை வெளிநாடு அனுப்பி வைத்தார்? என்ற விசாரணை தொடர்ந்து வருகிறது.