தீபாவளி விடுமுறையின் போது மதுக்கடைகளுக்கும் விடுமுறையா?

தீபாவளி விடுமுறையின் போது மதுக்கடைகளுக்கும் விடுமுறையா?


pon Radhakrishnan talk about tasmak leave


சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தீபாவளி அன்று(27.10.2019 ) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தை பாராட்டும் பொதுமக்கள், மதுவை குடித்து அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் மக்களை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கலாமே என சமூக ஆர்வலர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

Diwali

இந்தநிலையில் தீபாவளி விடுமுறையான 3 நாட்களும் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் மதுக்கடைகள் தீபாவளி அன்று விடுமுறை என்பதற்கு அதிகாரபூர்வக தகவல் வரவில்லை.

பொதுவாக வழக்கத்தைவிட தீபாவளி அன்றே மது விற்பனை சூடுபிடிக்கும். ஆனால் தீபாவளி அன்று கலவரங்களை தடுப்பதற்கும், மக்களின் உடல்நிலையை கவனத்தில் விடுமுறை அளித்தாலே நல்லது என பெண்களின் வேண்டுகோலாகவும் உள்ளது.