தமிழகம்

ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை.! சோக சம்பவம்.!

Summary:

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரியமேட்டில் லாட்ஜில் தங்கியிருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் (26) விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆயுதப்படை  காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், சென்னை பெரியமேட்டில் லாட்ஜில் தங்கியிருந்த சுரேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

காவலர் சுரேஷின் உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினறனர். தொடர்ந்து காவலர்களின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே வருவது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement