தமிழகம்

போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! வங்கியில் பரபரப்பு!

Summary:

police suicide in bank

சிவகங்கை ஆயுதப்படை காவலர் யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன். 29 வயது நிரம்பிய இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தார்.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த யோகேஸ்வரன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார்.

இந்தநிலையில், இன்று காலை 10.00 மணியளவில் வங்கியின் ஓய்வறைக்குள் சென்று உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement