தமிழகம்

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி.!கீழ்தாடை நொறுங்கி ஆபத்தான நிலையில் காவலர்.! என்ன கரணம்.?

Summary:

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கி

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டம் சிக்கலூர் மந்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரின் மகன் வேலுச்சாமி. காவல்துறையில் பணிபுரியும் இவர் கடந்த 5 நாட்களாக சென்னை வாலாஜா சாலையில் உள்ள பழைய அரசு விருந்தினர் மாளிகையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காவல் பணிக்கு வேலுச்சாமி நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இரவு 8.15 மணியளவில் வேலுச்சாமி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே தொண்டைக்குழியில் வைத்து சுட்டுக்கொண்டார். குண்டு துளைத்ததில் காவலர் வேலுச்சாமியின் கீழ்தாடை எலும்புகள் நொறுங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்கொலை முயற்சி செய்த போலீஸ்காரர் வேலுச்சாமி, பணி சுமையால் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது அவரது வீட்டில் குடும்ப பிரச்சனையால் தன்னை தானே சுட்டுக்கொண்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement