தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் காலி பணியிடங்கள்! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!

Summary:

police selection in tamilnadu


தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் தெரிவித்துள்ளது. 37 மாவட்டங்களில் உள்ள மையங்களில் 1 மணி 20 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை 2ம் நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள், திருநங்கைகள் உள்பட 3,784 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 6,545 பேரும், சிறைத்துறையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 119 பேரும், தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: 
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

வயது: 

விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும் , 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு -26 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு -29 வயது, திருநங்கைகள் வயது வரம்பு -29 வயது,  விதவைகள் வயது வரம்பு -35 வயது.


Advertisement