தமிழகம்

பச்சையப்பன் கல்லூரியில் ரூட்டு தல பஞ்சாயத்து..! 208 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முத

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.   கொரோனா காரணமாக மூடியிருந்த கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே மோதல்கள் எழுந்து வருகிறது. 

கல்லூரிகள் திறந்த முதல்நாளே சென்னை மின்சார ரயிலில் இரண்டு கல்லூரி மாணவர்கள் தரப்பில் இடையே எழுந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்தவாரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே எது சிறந்த ரூட் என்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூன்று பிரிவாக பிரிந்த மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். அதேபோல கடந்த 3-ஆம் தேதி அரசுப் பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 208 மாணவர்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்பு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் உதவி ஆணையர், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 208 மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.


Advertisement